உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கொலைக் குற்றவாளி என்று நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை ஒன்றில், ராகுல் காந்தி கூறியதற்கு அவர் மீது பாஜக கவுன்சிலர் கிருஷ்ணவதன் பிராம்பட் என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவ்வழக்கு இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, அதில் நேரில் ஆஜரான ராகுல் காந்தி தான் இந்த வழக்கில் குற்றமற்றவர் என்று தன் தரப்பு கருத்தை கூறினார். இந்த வழக்கு வரும் டிசம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி அகமதாபாத்தில் உள்ள அம்மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர் ஹர்திக் பட்டேல் மற்றும் காங்கிரஸ் கட்சியினர்களுடன் தேநீர் கடையில் அமர்ந்து, சிற்றுண்டியுடன் தேநீர் அருந்தினார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அந்த வீடியோவைப் பகிர்ந்திருந்தார். நேற்று சூரத், இன்று அகமதாபாத்தில் ஆஜர் ஆகினேன். இந்த அனைத்து வழக்குகளும் திட்டமிட்டு செய்யக்கூடியவை, மேலும் இங்கு வந்து என் காங்கிரஸ் குடும்பத்தோடு உண்டு உரையாட வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த பாஜகவினருக்கு நன்றி எனக் கூறிப்பிட்டிருந்தார்.
நேற்று இவர் மற்றொரு குற்றச்சாட்டு வழக்கில் சூரத் நீதிமன்றத்தில் ஆஜராகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: வேலையின்மை குறித்து மோடி பதிலளிக்க வேண்டும் - ராகுல் காந்தி