ETV Bharat / bharat

ராகிரி தினத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு

டெல்லி: தலைநகர் டெல்லியில் மக்கள் ராகிரி தினத்தில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தவுள்ளனர்.

ராகிரி தினம்
author img

By

Published : May 27, 2019, 7:48 AM IST

2017ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 3 முதல் டெல்லியில் ராகிரி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் கன்னவுட் பகுதியில் வாகனங்கள் முழுவதும் தடை செய்யப்பட்டு, டெல்லியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண், பெண், குழந்தைகள் என வயது வித்தியாசம் பாராமல் அனைத்து மக்களும் கூடுவது வழக்கம். இவ்வாறு அனைத்து மக்களும் ஒன்று கூடி சைக்கிள் ஓட்டுவது, ஜூம்பா, நடைபயிற்சி, ஜாகிங் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்வது வழக்கம். இவ்வாறு உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது இசையை ஒலிக்கவிட்டு அந்த தினத்தைக் கொண்டாட்டத்திற்குரியதாக மாற்றிவிடுவார்கள். இதேபோல், ராகிரி தினம் ஒவ்வொரு வருடமும் டெல்லி மக்களால் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், இந்த வருடத்துக்கான ராகிரி தினத்தை ராகிரி பவுண்டேசன் டெல்லி நகராட்சி கவுன்சில், உலக இந்திய ஆராய்ச்சி, டெல்லி காவல் துறையினருடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமையும் நடத்த திட்டமிட்டுள்ளது.

இது குறித்து டெல்லி நகராட்சி கவுன்சில் தலைவர் நரேஷ் குமார் கூறும்போது, இந்த வருட ராகிரி தினத்தில் புற்றுநோய் வராமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதேபோல் உடற்பயிற்சி செய்வதினை ஊக்குவிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.