கரோனா தீநுண்மியின் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டதால் வேலைக்காக வெளிமாநிலங்களுக்குச் சென்ற தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர்.
ஆனால், ஒருசிலரோ பிழைக்க வழியின்றி பல்லாயிரம் கி.மீ. தூரம் நடந்தே தங்களின் சொந்த மாநிலங்களுக்குச் செல்கின்றனர்.
இந்நிலையில், ஊரடங்கால் நேபாளத்தைச் சேர்ந்த 52 தொழிலாளர்கள் இந்தியாவில் தவித்துவந்தனர். இவர்கள் தற்போது பிகார் மாநிலம் பாகாஹாவில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கால் வேலை ஏதும் இல்லாமல் ஓய்வில் இருக்கும் தொழிலாளர்கள், அவர்கள் தங்கியுள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் செடிகளை நடுவது, வண்ணங்கள் மூலம் பள்ளியை அழகுப்படுத்துவது போன்ற பணிகளைச் செய்கின்றனர்.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா டூ பிகார் : 22 நாள்கள் நடந்தே பயணித்து சொந்த ஊரை சென்றடைந்த கூலித்தொழிலாளி!