ETV Bharat / bharat

'தனியார் நிறுவனம் வருவதால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்' - ரயில்வே வாரியத் தலைவர்! - தனியார் ரயில்கள்

டெல்லி: ரயில்வேயில் தனியார் நிறுவனம் வருவதால், வேலையிழப்பு ஏற்படுவதற்குப் பதிலாக வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும், புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகமாகும் என்றும் ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார்.

railway
railway
author img

By

Published : Jul 9, 2020, 4:17 PM IST

உலகளவில் நான்காவது மிகப்பெரிய ரயில்வே துறையான இந்திய ரயில்வேயில், முதன்முறையாக தனியார் பங்களிப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 109 வழித்தடங்களில் 151 ரயில்களை தனியார் இயக்கினால், ஏழை மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்,வேலையிழப்பு ஏற்படும் என எதிர்க் கட்சிகள் குரல் ஏழுப்பி வருகின்றன.

இதுகுறித்து பேசிய ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ், "ரயில்வேயில் தனியார் நிறுவனம் வருவதால் வேலையிழப்பு ஏற்படுவதற்குப் பதிலாக வேலைவாய்ப்பு அதிகரிக்கும். புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும். தனியார் நிறுவனம் கட்டுப்பாட்டில் 5 விழுக்காடு ரயில்கள் மட்டுமே தரப்படவுள்ளன. மீதமுள்ள 95 விழுக்காடு ரயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் தான் இயக்கப்படவுள்ளன. ஏழைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், தான் ரயில்களின் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

வரும் 2030ஆம்‌ ஆண்டிற்குள் 30 பில்லியன் பயணிகள் வந்துவிடுவார்கள். கடந்த ஆண்டில் மட்டும் 50 மில்லியன் மக்கள் ரயில் பயணத்திற்காக காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு தான், ரயில்வே தனியார் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுகிறது.

டிக்கெட் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக ரயில்வேயை விரிவாக்கம் செய்வது அவசியம். ரயில்வேயை மேம்படுத்துவதின் மூலம் அடுத்த சில ஆண்டுகளில், ரயில் காத்திருப்போர் பட்டியலில் எந்தப் பயணிகளும் இருக்க மாட்டார்கள்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.