ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் 2000ஆவது ஆண்டுகளில் தனது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, 'இரட்டை உடல்' தொடர்பான யோசனை இருந்ததாகவும், அதனை நிராகரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று 20 கேள்விகளுடன் ரஷிய அதிபர் புதினை தொடர்புகொண்டது. அந்நிறுவனத்துக்கு புதின் அளிக்க பதிலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அதில் இரட்டை புதின் உருவாக்கம் குறித்த கேள்விக்கு, “பயங்கரவாதத்துக்கு எதிரான கடினமான போரில் இது இருந்தது. மற்றொரு உடல் எனக்கு மாற்றாக இருக்கும் என சிலர் யோசனை கூறினார்கள்.
எனினும் இந்த யோசனை நிராகரிக்கப்பட்டது. இதனை தற்போது நினைவுகூர்கிறேன். மிக முக்கியமான கூட்டங்களை, உயர்மட்டக் கூட்டங்களை நடத்தும்போது இரட்டை உதவியாக இருக்கும் என்று அவர்கள் யூகித்தார்கள். இதில் அரசியல் எதுவும் இல்லை” என்று பதிலளித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு அதிபர் புதின், பிரதமர் டிமிட்ரி மெட்வெடே ஆகியோர் இரட்டையர் என்று உலக நாடுகளில் பரவிய செய்திக்கு பதிலளித்திருக்கும் அவர், “நாங்கள் இரட்டையர்கள் அல்ல, நிஜமானவர்கள்” என கூறினார். இரட்டை புதின் தொடர்பான செய்திகள் இணையத்தில் கொட்டி கிடக்கின்றன. புதின் போன்று ஒருவர் உருவாக்கப்பட்டுள்ளார் என்பது போன்ற செய்திகளுக்கும் பஞ்சமிருக்காது.
தசாப்தங்களாக தொடரும் இந்த தகவல்கள் வதந்தி என புதினே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆக்சிஜன் இல்லாமல் உயிர்வாழும் உயிரினம் கண்டுபிடிப்பு