சீனாவில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்துவருகிறது. இதில் இத்தாலி, ஈரான், தென் கொரியா போன்ற நாடுகளில் வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது.
அதேபோல், இந்தியாவிலும் வைரசின் தாக்கம் அதிகரித்துள்ளது. சீனாவுடன் எல்லைப்பகிர்ந்து கொண்ட ரஷ்யாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவுதான்.
இந்நிலையில் கரோனா பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் தொலைபேசி வாயிலாகக் கரோனா பரவல் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்தக் கலந்துரையாடலில் ரஷ்யாவில் உள்ள இந்தியர்கள் குறித்தும், இந்தியாவில் உள்ள ரஷ்யர்கள் குறித்தும் மாறி மாறி விசாரித்துக் கொண்டனர்.
இதையும் படிங்க...இந்தியாவில் கரோனா பாதிப்பு 562ஆக உயர்வு!