உலகளாவிய பெருந்தொற்று நோயான கரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் அதிவேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் 5,218 பேருக்கு கோவிட்-19 பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 251 பேர் உயிரிழந்ததாக அம்மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்திருந்தது.
கடந்த 25ஆம் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் பள்ளி-கல்லூரிகள், மக்கள் கூடும் வழிபாட்டுத் தலங்கள், பொழுதுபோக்கு மையங்கள், அரசு அலுவலங்கள் என அனைத்தையும் மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டது.
இருப்பினும் நாளுக்குநாள் அதிகரித்துவந்த அதன் தாக்கம் காரணமாக அம்மாநிலத்தில் 22 மண்டலங்கள், கோவிட்-19 பெருந்தொற்றின் சிவப்பு குறியீட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கரோனா ஊரடங்கு உத்தரவை இரண்டாம் கட்டமாக, மே மாதம் 3ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மாநில அரசு தனி நபர் இடைவெளியைப் பின்பற்றும் நோக்கில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்து, பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் தடைவிதித்துள்ளது.
ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக அம்மாநிலத்தின் நந்தேட் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஹசூர் சாஹிப் குருத்வாராவில் வழிபாடு மேற்கொள்ள சென்ற 2 ஆயிரம் யாத்திரீகர்கள் அங்கே சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் பல்வேறு பகுதிகளில் உள்ளூர் அமைப்புகள், தன்னார்வலர்கள் உதவியுடன் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நந்தேட் மாவட்டத்தில் சிக்கி இருக்கும் இரண்டாயிரம் யாத்திரீகர்களை மீண்டும் பஞ்சாப் மாநிலத்திற்கு திருப்பியனுப்ப ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென வலியுறுத்தி கடந்த 25ஆம் தேதி மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆகிய இருவருக்கும் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் கடிதம் எழுதினார்.
இதனையடுத்து, இரண்டாயிரம் யாத்திரீகர்கள் தொடர்பில் விரைவில் முடிவெடுப்பதாக மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உறுதியளித்தார்.
தற்போது, மீண்டும் பஞ்சாப் யாத்திரீகர்களைத் திரும்பியனுப்ப கோரிக்கைவிடுத்தபோது அதற்கு மத்திய அரசு இன்னும் அனுமதிக்கவில்லை என உத்தவ் தாக்கரே கூறியதாகப் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : பல்கர் கும்பல் வன்முறை: இஸ்லாமியர்கள் யாரும் கைதுசெய்யப்படவில்லை!