கரோனா பரவல் அச்சம் காரணமாக, 5,800 கைதிகளை விடுவிக்கும் முடிவை பஞ்சாப் மொஹாலியிலுள்ள சிறைச்சாலை நிர்வாகம் எடுத்துள்ளது. இதுகுறித்து மாநில அமைச்சர் சுக்ஜீந்தர் சிங் ரந்தாவா கூறுகையில், “கரோனா பரவல் அச்சம் காரணமாக, மொஹாலி சிறையிலுள்ள 5,800 கைதிகளை விடுவிக்க முடிவெடுத்துள்ளோம். இவர்களில் இரண்டாயிரத்து 800 பேர் சிறிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள். மீதமுள்ள மூவாயிரம் பேர் சிறிய அளவிலான போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள்.
எனினும், இதுபற்றிய இறுதி முடிவு இன்னும் வரவில்லை. சிறை அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடர்கின்றனர்” என்றார். இந்தியாவில் கரோனா பாதிப்பு அறிகுறிகள் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.