நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், பஞ்சாப்பில் கரோனா தொற்று பரவல் குறித்து கண்டறிய சிரோ சர்வே எடுத்திட முதலமைச்சர் அமரீந்தர் சிங் தீர்மானித்துள்ளார். அதன்படி, ஐந்து மாவட்டங்களில் 4,800 நபர்களைத் தேர்தேடுத்து கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர், சுகாதார நிபுணர்களுடன் மெய்நிகர் மறுஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். அதில், ஐந்து மாவட்டங்களிலிருந்து ஐந்து கட்டுப்பாட்டு மண்டலங்களில் நடத்தப்பட்ட முதல் செரோ சர்வேக்கு மாறாக, கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே கரோனா அளவைக் கண்டறிய வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
பாட்டியாலா, எஸ்.ஏ.எஸ் நகர், லூதியானா, ஜலந்தர் மற்றும் அமிர்த்சா ஆகிய இடங்களில் முதல் சர்வே நடத்தப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட சர்வேயில் கிராமங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த 120 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ய முடிவுசெய்துள்ளனர். கரோனா தொற்றை மாநிலத்திலிருந்து விரட்டும் முயற்சியில் மாநில அரசு தீவிரமாக பணியாற்றி வருகின்றது.