மத்திய அரசால், அண்மையில் கொண்டுவரப்பட்ட வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலை வீசிவருகிறது. இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறி, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் குர்ஜந்த் சிங், குர்பச்சன் சிங் ஆகிய இருவரும் மாரடைப்பு காரணமாக, கடந்த திங்கட்கிழமை உயிரிழந்துள்ளனர். விவசாயிகளின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்த பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், அவர்களது குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.