ETV Bharat / bharat

வாடிக்கையாளர்களே பெட்ரோல் நிரப்பலாம்... புனேவில் புது முயற்சி! - வாடிக்கையாளர்களே பெட்ரோல் நிரப்பலாம்

மும்பை: ஊழியர்களின் உதவியின்றி வாடிக்கையாளர்களே பெட்ரோல் நிரப்பிக்கொள்ளும் வகையில், புனேவில் ஒரு பெட்ரோல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

Petrol pump in Pune Petrol pump lets you fill petrol by self Aatmanirbar petrol pump fill petrol by self புனே புனே பெட்ரோல் நிலையம் புனே பெட்ரோல் பல்க் வாடிக்கையாளர்களே பெட்ரோல் நிரப்பலாம்
புனே பெட்ரோல் நிலையம்
author img

By

Published : Jun 14, 2020, 10:18 AM IST

புனே பகுதியிலுள்ள வட்டாரப் போக்குவரத்துக் கழக அலுவலகம் அருகே அமைந்துள்ள பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில், வாடிக்கையாளர்களே பெட்ரோல் நிரப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் நிலையங்களில், பெட்ரோல் நிரப்பும்போது ஊழியர்கள் ஏமாற்றுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பெட்ரோல் நிலையத்துக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கைகளை கழுவ கிருமிநாசினி வழங்கப்படுகிறது. இதன்பின்னர் எவ்வாறு பெட்ரோல் நிரப்பவேண்டும் என ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு கற்றுத் தருகின்றனர். இதற்கு வாடிக்கையாளர்கள் நல்ல வரவேற்பை அளித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய பெட்ரோல் நிலையத்தின் உரிமையாளர் கிரிஸ் மங்கர், 'பெரும்பாலான ஊழியர்கள் பெட்ரோல் நிரப்பும் இயந்திரத்தைச் சேதப்படுத்துகிறார்கள். மேலும், வாடிக்கையாளர்களை ஊழியர்கள் ஏமாற்றுவதாகவும் பெட்ரோல் திருடுவதாகவும் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இதன்காரணமாக வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்றார்.

இதையும் படிங்க: '30 ஆண்டுகளில் மிக மோசமான இழப்பை டாடா நிறுவனம் இப்போது கண்டிருக்கிறது'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.