ETV Bharat / bharat

புதுச்சேரியில் நூதன முறையில் தேர்தல் விழிப்புணர்வு! - பாண்லே பால்

புதுச்சேரி: அரசு நிறுவனமான பாண்லே பால் பாக்கெட்டுகளில் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வாசகங்களை பதிவுசெய்து புதுச்சேரி தேர்தல் ஆணையம் வெளியிட்டுவருகிறது.

புதுச்சேரியில் நூதன முறையில் தேர்தல் விழிப்புணர்வு!
author img

By

Published : Mar 18, 2019, 11:24 AM IST

புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவருவதையொட்டி, வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி அரசு நிறுவனமான பாண்லே பால் பாக்கெட்டுகளில் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வாசகங்களை பதிவுசெய்து வெளியிட்டுவருகிறது.

அதில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விழிப்புணர்வு வாசகங்கள்பதிவிடப்படுகின்றன. இந்த வித்தியாசமான செயல்முறையால் புதுச்சேரியில் வாக்குப்பதிவு விழுக்காடு அதிகரிக்கும் என்று புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Intro:உங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல புதுச்சேரி அரசு பால் பாக்கெட்டில் தேர்தல் துறையின் நூதனமான முறையில் விளம்பரத்தை செய்து வாக்காளர்களுக்கு வீடு தேடி செல்லும் பால் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேர்தல் துறை

Body:புதுச்சேரி மாநிலத்தில் பாராளுமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவு எட்டுவதற்கான புதுச்சேரி தேர்வுத்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியும் பொதுமக்கள் கூடும் ,இடங்களில் ஆங்காங்கே விளம்பர பதாகைகள், தட்டிகள் ,வைத்து பலகட்ட நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது. இந்த முறை தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிந்துகொள்ளும் விதமாக விவிபாட் இயந்திரம் குறித்தும் புதுச்சேரி முழுவதும் தேர்தல் துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது .

இந்நிலையில் புதுச்சேரி அரசு நிறுவனமான பாண்லே பால் அன்றாடம் அதிக வீடுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது அதில் விளம்பரம் செய்தால் எளிதில் மக்களிடம் சென்றடையும் என வித்தியாசமாக புதுச்சேரி தேர்தல் துறை திட்டமிட்டது .

இதையடுத்து பான்லே பால் பாக்கெட்டுகளில் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வாசகங்கள் பதிவு செய்து வெளியிட்டு வருகிறது. அதில் உங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல. ஏப்ரல் 18 வாக்களிக்கும் நாள் என்ற வாசகங்களை அச்சிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விழிப்புணர்வு வாசகங்களை பதிவிட்டு வருகிறது தினமும் காலை,மாலை என இருவேளைகளிலும் பால் பாக்கெட் மூலம் இந்த வாசகங்கள் பொதுமக்களிடம் சென்றடைகிறது தேர்தல் துறையின் இந்த வித்தியாசமான நூதனமான முறையிலான பிரச்சாரம் புதுச்சேரி, காரைக்கால் மக்களிடம் எளிதில் சென்று வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க கூடும் என தேர்தல் துறை நம்பிக்கையில் உள்ளது.

Conclusion:உங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல. தேர்தல் தேதி 18 .புதுச்சேரி அரசு பால் பாக்கெட்டில் தேர்தல் துறையின் நூதனமான முறையில் விளம்பரத்தை செய்து வாக்காளர்களுக்கு வீடு தேடி செல்லும் பால் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேர்தல் துறை
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.