டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த இந்தப் போராட்டத்தில் 8 தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. புதுவை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஏ.ஐ.டி.யு.சி சேதுசெல்வம், ஐ.என்.டி.யு.சி. ஞானசேகரன், சி.ஐ.டி.யு. சீனுவாசன், ஏ.ஐ.சி.சி.டி.யு. புருஷோத்தமன், எல்.எல்.எப்.செந்தில், எம்.எல்.எப். வேதா வேணுகோபால், ஏ.ஐ.யு.டி.யு.சி சிவக்குமார், அரசு ஊழியர் சம்மேளனம் பிரேமதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.
இந்தப் போராட்டம் குறித்து பேசிய ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத் தலைவா் வி.எஸ்.அபிஷேகம், "ஏ.எப்.டி பஞ்சாலை பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு நூற்றாண்டைக் கடந்து செயல்பட்டுவருகிறது. இதனால் எந்த வகையிலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு கிடையாது. ஆனால், ஏ.எப்.டி பஞ்சாலையை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
ஏ.எப்.டி, சுதேசி, பாரதி ஆகிய மூன்று பஞ்சாலைகளையும் மூடுவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கக் கூடாது. ஏ.எப்.டி பஞ்சாலையை இயக்க வேண்டுமென புதுவை அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அமலாக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
1980 ஆம் ஆண்டைப் போலவே மேற்சொன்ன 3 ஆலைகளிலும் 15 ஆயிரம் தொழிலாளா்கள் நேரடியாகப் பணியாற்றவும், மத்திய - மாநில அரசுகளுக்கு மேற்படி காலகட்டங்களில் கிடைத்து வந்தது போல நிரந்தர வருவாய் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் வலியுறுத்தினார்.
இந்தப் போராட்டத்தில் புதுவை மாநில நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் இதில் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க : நாடாளுமன்றத்திலிருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் 'சஸ்பெண்ட்'