புதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறப்பது தொடர்பாக கலால் துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அருண், கலால் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், "புதுச்சேரியில் நாளை முதல் மதுபானக் கடைகள் திறப்படும். காலை 10 மணி முதல் 7 மணி வரை கடையில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். மது வாங்க வருபவர்கள் முகக் கவசம் அணிந்தால் மட்டுமே மதுபானம் விற்க வேண்டும். தகுந்த இடைவெளி கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மது விலை கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் 3 மாதங்களுக்கு இந்த விலை அமலில் இருக்கும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ஆர்.எஸ். பாரதியை கண்டிப்பதுதான் ஸ்டாலினுக்கு அழகு' - முதலமைச்சர் அறிவுரை