ETV Bharat / bharat

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகும் புதுச்சேரி: 1,500 காவலர்கள் குவிப்பு! - pudhucherry chief minister narayanasamy

புதுச்சேரி: புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான சுற்றுலாப் பயணிகள் கடற்கரையில் கூடுவார்கள் என்ற எதிர்பார்ப்பால் அனைத்து பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்

புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்டம்  புதுச்சேரி செய்திகள்  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி  pudhucherry chief minister narayanasamy  security arrangements on new year celebration
புதுச்சேரி நாராயணசாமி
author img

By

Published : Dec 30, 2019, 11:42 PM IST

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கவுள்ள நிலையில் புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு பணிக்கு 1,500 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள முதலமைச்சர் நாராயணசாமி காவல்துறை உயரதிகாரிகள் கூட்டத்தை இன்று கூட்டினார். புதுச்சேரி சட்டப்பேரவை கமிட்டி அறையில் நடந்த இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருண், காவல்துறை இயக்குநர் பாலாஜி ஸ்ரீவத்ஸவா, உள்ளாட்சித் துறை அலுவலர்கள், ஆணையர்கள், மாநகர முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்திற்கு பின்னான செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாராயணசாமி, புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எவ்வித இடையூரும் தரக்கூடாதென்று காவல்துறையிடம் தான் தெளிவுபட கூறியுள்ளதாகவும் சுற்றுலாத்துறை மூலம் புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் கடற்கரை, புதுச்சேரி கடற்கரை படகு குழாம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகும் புதுச்சேரி: 1,500 காவலர்கள் குவிப்பு

புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு வாய்ப்புள்ளதால், குடிநீர் வசதி, நடமாடும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அவர், துறைமுகப் பகுதியில் நடைபெறவிருந்த புதுவருட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும், புதுச்சேரியில் உள்ள தங்கும் விடுதிகளில் நடைபெறும் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கான வரிகளை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

புதுச்சேயில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்த கேள்விக்கு, புதுச்சேரி சின்ன ஊர் இதில் தாங்கள் என்ன செய்ய முடியும் என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க : கேட் கீப்பரை தாக்கிய போதை இளைஞர்கள்

Intro:புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை புதுச்சேரி கடற்கரையில் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது அனைத்து பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்று முதல் நாராயணசாமி தெரிவித்துள்ளார்

Body:புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சட்டப்பேரவையில் அவரது அறையில் சந்தித்தார் அப்போது பேசிய அவர் புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித இடையே ஒரு தரக்கூடாது என போலீஸ் துறையிடம் தெளிவுபட கூறியுள்ளதாகவும் சுற்றுலாத்துறை மூலம் புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் கடற்கரை ,புதுச்சேரி கடற்கரை படகு குழாம், உள்ளிட்ட பகுதிகளில் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மேலும் இப்பகுதிகளில் மருத்துவக்குழு மற்றும் கடற்கரை பகுதியில் கண்காணிப்பை மீறி சுற்றுலாப்பயணிகள் கடலில் சென்றிருந்தாள் அவர்களை மீட்க கப்பல் தயார் நிலையில் உள்ளன மேலும் நாங்களும் இரவு நேர ரோந்து கண்காணிப்பில் ஈடுபடுவோம் என்றும் அவர் தெரிவித்தார் புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை புதுச்சேரி கடற்கரையில் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது இதற்காக குடிநீர் வசதி கழிப்பிட வசதிகள் நடமாடும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

புதுச்சேரி போக்குவரத்து நெரிசல் குறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் புதுச்சேரி சின்ன ஊர் இதில் நாங்கள் என்ன செய்ய முடியும் என்றும் அவர் பதில் அளித்தார்

புதுச்சேரி துறைமுக பகுதியில் நடைபெறவிருந்த புதுவருட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன புதுச்சேரியில் ஹோட்டல் உட்பகுதிகளில் நடைபெறும் புத்தாண்டு நிகழ்ச்சிகள் வரிகளை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்

புத்தாண்டு நிகழ்ச்சிகள் அனுமதி பெறுவதில் உள்ள அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் புதுச்சேரியில் கடந்த ஆண்டு கடற்கரை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை விட இந்த ஆண்டு தனியார் நடத்தும் புத்தாண்டு நிகழ்ச்சிகள் மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது

Conclusion:புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை புதுச்சேரி கடற்கரையில் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது அனைத்து பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்று முதல் நாராயணசாமி தெரிவித்துள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.