ETV Bharat / bharat

புதுச்சேரி அமைச்சரின் செல்போனை பறித்துச் சென்ற நபர் கைது! - puducherry minister Kamalakkannan cellphone thief arrested

புதுச்சேரி: அமைச்சர் கமலக்கண்ணனிடமிருந்து செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

puducherry minister Kamalakkannan cellphone thief arrested

author img

By

Published : Mar 7, 2020, 3:38 PM IST

புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன். இவர், கடந்த 2ஆம் தேதி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபயணம் மேற்கொண்ட பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வர்த்தக மைய வளாகம் அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் அவரது செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்று தலைமறைவாகினர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் பதிவை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்ற நபர்கள் புதுச்சேரியைச் சேர்ந்த பாலகுமாரன், முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரியவந்தது.

அமைச்சரின் செல்லிடப்பேசியைப் பறித்து சென்ற நபர்.

அமைச்சரிடம் இருந்து பறித்து சென்ற செல்லிடப்பேசியை, 4 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு கடையில் இருவரும் விற்னை செய்துள்ளனர். இதையடுத்து செல்லிடப்பேசியைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், பாலகுமாரனை கைது செய்தனர். தொடர்ந்து வழிப்பறிக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த காவல்துறையினர், தலைமறைவாகிய செந்தில்குமாரை தேடி வருவதாக, புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் மாறன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதையும் படிங்க... கடற்கரையில் நடைப்பயிற்சி - அமைச்சரின் செல்போனை பறித்துச் சென்ற நபர்கள்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.