ETV Bharat / bharat

'மக்களிடம் என்னைத் தெரியப்படுத்தவே பூஜை பொருட்களை வழங்கி வருகிறேன் - மநீம மாதர் படை பர்வதவர்தினி - puducherry makkal needhi maiyam

புதுச்சேரி: தொகுதி மக்களிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவே பூஜை பொருள்களை இலவசமாக வழங்கி வருகிறேன் என புதுச்சேரி ‘மய்யம் மாதர் படை' பர்வதவர்தினி தெரிவித்துள்ளார்.

மய்யம்
மய்யம்
author img

By

Published : Feb 9, 2021, 10:28 PM IST

மக்கள் நீதி மய்யம் கட்சியில் பெண்களுக்காக ‘மய்யம் மாதர் படை' என்ற புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி ‘மய்யம் மாதர் படை' சேர்ந்த பர்வதவர்தினி, கடந்த ஒரு வாரமாக ராஜ் பவன் தொகுதி மக்களுக்கு பூஜை பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறார். அதில் கட்சி சின்னமும், அவரின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. மக்கள் நீதி மையம் கட்சி இலவசங்களை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த நபர், இலவசங்களை வாரி வழங்குவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று, ராஜ்பவன் தொகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பர்வதவர்தினி, "இந்த தொகுதியில் தான் பிறந்து வளர்ந்து, கல்வி பயின்றேன். இங்கிருக்கும் நீண்டக் கால பிரச்னைகள் எனக்கு நன்கு தெரியும். அதனால், இங்குள்ள சில ஏழைகளுக்கு என்னால் முடிந்த சிறு சிறு உதவிகளை செய்து வருகிறேன். மக்களிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவும், வீட்டு பெண்களிடம் எனது அறிமுகத்தை கொண்டு சேர்க்கவும், பூஜைபொருட்களை இலவசமாக வழங்கி வருகிறேன்.

புதுச்சேரி ‘மய்யம் மாதர் படை' பர்வதவர்தினி

இத்தொகுதியில் பிரச்னைகள் பல உள்ளன. அவற்றில் ஒன்று முறைப்படுத்த முடியாத போக்குவரத்து நெரிசல்கள். மேலும், வேலைவாய்ப்புயின்மையும் அதிகரித்துள்ளது. இதனால் இளைஞர்கள் தடம் மாறும் சூழல் உருவாகியுள்ளது. மீனவர்களுக்கு படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு ஏதுவான இடங்கள் இல்லை. மக்களின் தேவைகளை அரசு நிறைவேற்றத் தவறி விட்டது" எனக் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: நேரு குறித்து இழிவான விமர்சனம்- சர்ச்சையில் சிக்கிய ஹெச். ராஜா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.