மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளமானது ஆந்திராவின் பத்ராச்சலம் வழியாக புதுச்சேரி மாநிலம் ஏனாமில் உள்ள கடலில் கலக்கிறது.
இதனால் கோதாவரி ஆற்றங்கரையோரம் உள்ள ஏனாம் பகுதிகளான ராஜிவ் காந்தி நகர், பாலயோகி நகர், வெங்கட நகர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ள நீர் வீடுகளில் புகுந்ததால் மீட்புப் படையினர் படகுகள் மூலம் மக்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து வருகின்றனர்.
கோதாவரி ஆற்றின் கரையோரம் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சரும், ஏனாம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் துணை நிலை ஆளுநருக்கு பலமுறை கோரிக்கை முன்வைத்தனர். ஆனால், தடுப்புச் சுவர் அமைப்பதற்கு இதுவரை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நீலகிரி வெள்ளம்: வீடுகளை இழந்த மக்கள் உணவின்றி தவிப்பு!