புதுச்சேரி பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் கரோனாவை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று (ஜூன் 21) இரவு நடைபெற்றது. சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலர் மற்றும் பல்வேறு துறை செயலர்கள் பங்கேற்றனர். இதில் கடையடைப்பு நேரம், மார்க்கெட் இடமாற்றம் உள்ளிட்ட பல அறிவிப்புக்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், இன்று (ஜூன் 22) புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் மோகன் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “புதுச்சேரியில் மேலும் 17 பேர் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17 பேர் புதுச்சேரி அரசு மருத்துவமனையிலும், ஜிப்மரில் கடலூரைச் சேர்ந்த ஒருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் 383 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 226 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கரோனா குணமடைந்து 149 பேர் இதுவரை வீடு திரும்பியுள்ளனர். இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரியில் மாஸ்க் அணியாத பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் அதே மாஸ்க்கை தயாரிக்கும் நிறுவனத்தால் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு நிறுவனத்தின் அலட்சியமே காரணம். இவர்களால் இன்னும் நோய் பரவும் அபாயம் உள்ளது” என்றார்.
இதையும் படிங்க: 'அரசு விடுதியில் சிறுமிகள் கர்ப்பம்'- யோகி அரசுக்கு பிரியங்கா சரமாரி கேள்வி