கரோனா வைரஸ் தாக்குதலால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கு நிவாரண நிதிகளை வழங்கி வருகிறது. ஆனால், இதுவரை புதுச்சேரிக்கு ஒரு ரூபாய்கூட நிவாரணம் வழங்கப்படவில்லை. புதுச்சேரிக்கு 990 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என அம்மாநில அரசு சார்பில் இரண்டு முறை கடிதங்கள் அனுப்பப்படும் இதுவரை நிதி வழங்கப்படவில்லை.
இதனை கண்டிக்கும் வகையில் காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகள் சார்பில் காந்தி சிலை முன்பு இன்று கறுப்புக் கொடியுடன் போராட்டம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக கட்சித் தலைவர்கள் மிஷின் வீதியில் கூடியபோது அவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். காங்கிரஸ் கட்சித் தலைவர் சுப்பிரமணியன், திமுக அமைப்பாளர்கள் சிவா, சிவக்குமார்,வெங்கடேசன் எம்எல்ஏ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ராஜாங்கம், பெருமாள், முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைப்பாளர் தேவபொழிலன் மற்றும் நிர்வாகிகள் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க:'கரோனா நிவாரண நிதியாக திரைப்பட நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.74 லட்சம் வழங்கல்'