ETV Bharat / bharat

'புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது!' - நமச்சிவாயம் உறுதி - புதுச்சேரி

புதுச்சேரி: காங்கிரஸ் ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது என அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

நமச்சிவாயம்
author img

By

Published : Apr 6, 2019, 7:46 PM IST

புதுச்சேரி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் இன்று மாலை சேதராப்பட்டு கிராமத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், "என்.ஆர். காங்கிரஸ் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பேசி வருவது ஒரு போதும் நடக்காது. ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பே இல்லை. காங்கிரஸ் கட்சியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இதே நிலையில் உறுதியாக உள்ளனர். மீதமுள்ள இரண்டு ஆண்டுகளில் காங்கிரஸ் வெற்றிகரமாக மக்கள் நலன் சார்ந்த பணிகளை முன்னிறுத்தி ஆட்சி செய்யும். வரும் 2021ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி புதுச்சேரியில் அமையும். புதுச்சேரியில் மோடியின் அலை வீசவில்லை. ராகுல் காந்தி தேர்தல் அறிக்கை மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் ராகுல் காந்தி பிரதமராவது உறுதி", என்றார்.

நமச்சிவாயம் பேட்டி

Intro:புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம் ஆவேசம்

Body:புதுச்சேரி
புதுச்சேரி பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தின் ஆதரித்து அம்மாநில அக்கட்சித் தலைவர் நமச்சிவாயம் இன்று மாலை சேதராப்பட்டு கிராமத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது பேசிய அவர் ,என் ஆர் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படும் என பேசி வருவது ஒரு போதும் நடக்காது ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பே இல்லை காங்கிரஸ் கட்சி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இதே நிலையில் உறுதியாக உள்ளனர் என்றார் மேலும் இன்னும் உள்ள இரண்டு ஆண்டுகளில் காங்கிரஸ் வெற்றிகரமாக மக்கள் நல பணிகளை ஆற்றி ஆட்சி செய்யும். இரண்டாயிரத்தி 21 ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை புதுச்சேரியில் அமையும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார் புதுச்சேரியில் மோடியின் அலை வீசவில்லை ராகுல் காந்தி தேர்தல் அறிக்கை மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது மத்தியில் ராகுல் காந்தி பிரதமராவது உறுதி என்றார் இந்த பிரச்சாரத்தின் போது உசுடு சட்டமன்ற உறுப்பினர் தீ பாய்ந்தான் உடன் இருந்தார்

Conclusion:புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம் ஆவேசம்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.