தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளை தமிழ்நாடு, புதுச்சேரியிலுள்ள திமுகவினரும், அதன் கூட்டணி கட்சியினரும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடிவருகின்றனர்.
அந்த வகையில், புதுச்சேரி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தெற்கு திமுக மாவட்ட அமைப்பாளர் சிவா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதேபோல வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சிவகுமார் ஏற்பாடு செய்திருந்த விழாவிலும் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
![Puducherry cm tribute formar DMK leader Karunanidhi for his birth anniversary](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/02:35_tn-pud-02-kalainar-birthday-cm-7205842_03062020125731_0306f_1591169251_806.jpg)