திமுக நிறுவனரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான அண்ணாவின் நினைவுத்தினம் இன்று (பிப். 3) அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி அண்ணாசாலையில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு அரசு சார்பில் முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதேபோன்று அதிமுக சார்பில் கிழக்கு மாநில செயலாளர், சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன், கட்சி நிர்வாகிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோன்று திமுக சார்பில் தெற்கு மாநில அமைப்பாளர் சிவா, அமுமுக சார்பில் வேல்முருகன் ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து பல்வேறு கட்சிகளின் சார்பில் அண்ணாவின் நினைவுத்தினத்தையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க...M-இல் தொடங்கும் சர்வாதிகாரிகளின் பெயர் - மோடியை விமர்சித்த ராகுல்!