புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்தப் பயணத்திற்கிடையே தனது அரசு வேலைகளையும் அவர் மேற்கொள்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நாராயணசாமியின் இந்தப் பயணத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவர் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "முதலமைச்சர் மீண்டும் தனிமுறைப் பயணமாகச் சிங்கப்பூர் சென்றுள்ளார். அதே நேரத்தில் அங்கு அரசு வேலைகளைப் பார்க்கிறார். வெளிநாடு செல்வதற்கு முன் இந்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். முதலமைச்சர், அமைச்சர்கள் குடியரசுத் தலைவரிடம் அனுமதி பெற்றாக வேண்டும்.
ஆனால், முதலமைச்சர் அனுமதி பெற்றதாகத் தெரியவில்லை. இதேபோல் சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவும் அடிக்கடி இலங்கை சென்றுவருகிறார். இது பற்றி மத்திய அரசு அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: என்னைப் பார்த்தா பேய் மாதிரி இருக்கா? - கிரண்பேடி ஆவேசம்