ETV Bharat / bharat

சிங்கப்பூரில் தவித்த இளைஞரை காப்பாற்றிய புதுவை முதலமைச்சர் - Singapore worker

புதுச்சேரி: முதலமைச்சர் நாராயணசாமி முயற்சியால் சிங்கப்பூரில் சிக்கி தவித்த புதுவை இளைஞர் இந்தியா அழைத்து வரப்பட்டார்.

இளைஞர் மீட்பு
இளைஞர் மீட்பு
author img

By

Published : Jul 10, 2020, 6:13 PM IST

சிங்கப்பூரில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் பரத் பாபு. இவரது குடும்பத்தினர் புதுச்சேரி லாஸ்பேட்டை அசோக் நகரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவைப் போன்று சிங்கப்பூரிலும் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் புதுச்சேரி இளைஞர் சிங்கப்பூரில் கடந்த மூன்று மாதங்களாக சிக்கிக்கொண்டார்.

இதற்கிடையில் அவரது பணியும் பறிபோனதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பரத் பாபு புதுச்சேரியில் உள்ள நண்பர்களின் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தகவலைக் கூறினார். பின்னர் அவரது நண்பர்கள் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து இது குறித்து தகவலை தெரிவித்தனர்.

இதையடுத்து முதலமைச்சர் நாராயணசாமி சிங்கப்பூரில் இருந்த இந்திய தூதரக அலுவலரை தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக உயர் அலுவலர்களையும் தொடர்பு கொண்டு புதுச்சேரி இளைஞர் சிங்கப்பூரில் சிக்கித் தவிப்பது தொடர்பாக தகவலைக் கூறினார். அவரை உடனடியாக சிறப்பு அனுமதி கொடுத்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதன் பிறகு ஓரிரு நாளில் திருச்சி விமான நிலையம் மார்க்கமாக புதுச்சேரி அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ச்சியாக அவர் புதுச்சேரி லாஸ்பேட்டையில் 14 தனிமைப்படுத்தப்பட்டு இருந்த இந்த நிலையில் இன்று (ஜூலை 10) அவர் புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமியை நேரில் சந்தித்து தன்னை 24 மணி நேரத்தில் இந்தியாவிற்கு வருவதற்கு உதவிகள் புரிந்ததற்காக நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.