புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "கரோனா நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவர் வசிக்கும் பகுதி முழுவதையும் 28 நாள்களுக்கு தனிமைப்படுத்துவது நியாயமாகாது. அங்கு வசிக்கும் 5,000 குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. நோய் பாதித்தவரின் இரண்டு தெருக்களை தனிமைப்படுத்திவிட்டு மீதமுள்ள மக்களை விடுவிப்பதே சரி.
ஊரடங்கிற்கு மத்திய அரசு என்ன செய்யப்போகிறது. கடந்த 45 நாள்களாக அனைத்து மாநிலங்களும் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. கனிசமான நிதியை கொடுத்து மாநில அரசுகளின் பொருளாதாரம் மேம்பட மத்திய அரசு உதவ வேண்டும். கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கை பிறப்பித்த, மத்திய அரசு தான் அதனால், ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு செய்ய வேண்டும்.
நிபுணர் குழுவை அமைத்து மாநில அரசுகளின் பொருளாதாரத்தை உயர்த்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: வேலை நேரத்தை அதிகரிப்பதால் யாருக்கும் பலனில்லை : கர்நாடக அரசு