ஜார்க்கண்ட், அசாம், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள், புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வந்தனர் .
ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டதால் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு இவர்கள் அரசிடம் விண்ணப்பித்திருந்தனர்.
இதையடுத்து சுமார் 1,119 பேர் ( புதுச்சேரி- 828, காரைகால் - 291 ) புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்து, சிறப்பு ரயில் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முதலமைச்சர் நாராயணசாமி இந்த சிறப்பு ரயிலை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.