ETV Bharat / bharat

உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் - புதுச்சேரி தலைமை தேர்தல் ஆணையர்!

புதுச்சேரி: உள்ளாட்சித் தேர்தல் தேதி உரிய காலத்தில் அறிவிக்கப்படும் என புதுச்சேரி யூனியன் பிரதேச தலைமை தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பு

author img

By

Published : Oct 23, 2020, 3:52 PM IST

புதுச்சேரி தேர்தல் ஆணையராக ராய் பி தாமஸ் நேற்று முன்தினம் (அக். 21) அறிவிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் நேற்று (அக். 22) ஆளுநர் கிரண்பேடியை அவரது மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து இன்று (அக். 23) ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேச தலைமை தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் ராய் பி. தாமஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “புதுச்சேரியில் தொகுதி மறுசீரமைப்பு பணிகள் முடிந்துவிட்டன. அதனால் அடுத்தக்கட்ட வேலைகள் தேர்தல் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெறும். மாவட்ட தேர்தல் அலுவலர்களை நியமிப்பது, மண்டல அலுவலர்களை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும். பின்னர், வாக்காளர் பட்டியல் தயாரானவுடன் திருத்தப் பணி நடைபெறும்” என்றார்.

புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பு

புதுச்சேரியில் கடந்த பத்தாண்டுகளாக நடைபெறாமல் உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்து பதில் அளித்த அவர், உள்ளாட்சி தேர்தல் தேதி உரிய காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியுமா என உறுதியாக கூற முடியாது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க...சர்ச்சையை கிளப்பிய பாஜகவின் தேர்தல் வாக்குறுதி: விளக்கமளித்த மத்திய அமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.