தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, அரியலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நோய்த் தொற்று அதிகம் உள்ள காரணத்தினால், அம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் புதுச்சேரி மாநிலத்திற்குள் வரக்கூடாது என்று புதுச்சேரி காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அதுமட்டுமின்றி தங்களது எல்லைப் பகுதி முழுவதும் தடுப்புகள் போட்டு, சீல் வைத்துள்ளனர். இதனால் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் பகுதிக்கும், விழுப்புரத்திலிருந்து புதுச்சேரிக்கும் யாரும் செல்ல முடியாது.
இதையும் படிங்க: ஜிப்மரில் மே 8ஆம் தேதி முதல் வெளிப்புற சிகிச்சைப் பிரிவு தொடங்கும்!