புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபாலனுக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, சட்டப்பேரவை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சட்டப்பேரவை மண்டபம் மூடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடர் அவசர அவசரமாக திறந்தவெளியில் நடத்தப்பட்டு முடிவடைந்தது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் பணியாற்றும் இரண்டு பாதுகாவலர்களுக்கு, நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். கரோனா எதிரொலி காரணமாக, சட்டப்பேரவை பாதுகாவலர்கள் ஓய்வறை சட்டப்பேரவை நுழைவாயில் கேட், சட்டப்பேரவை சுற்றிலும் மீண்டும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
மேலும், புதுச்சேரி சட்டப்பேரவை இரண்டு நாள்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வரும் 29ஆம் தேதி சட்டப்பேரவை திறக்கப்படுகிறது. அன்றைய தினம் ஜெயபால் எம்எல்ஏவுக்கு அருகில் அமர்ந்திருந்த முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது.
புதுச்சேரி: தேனியில் ஒரே நாளில் 217 பேருக்கு கரோனா