ETV Bharat / bharat

வக்பு வாரியத்துக்கு பூட்டு போட்டு அதிமுகவினர் நூதனப் போராட்டம்! - Puducherry admk party members protest demanding waqf board

புதுச்சேரி : அதிமுக சட்டப்பேரவைத் தலைவர் அன்பழகன் தலைமையில் வக்பு வாரியம் அமைக்கக்கோரி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

வக்பு வாரியத்துக்கு பூட்டு போட்டு அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டம்.

author img

By

Published : Nov 6, 2020, 3:41 PM IST

புதுச்சேரி, ஏனாம், வெங்கடாச்சலப்பிள்ளை வீதியில் உள்ள வக்பு வாரிய அலுவலகத்துக்கு பூட்டு போட்டு அஇஅதிமுகவினர் இன்று (நவ.06) முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக சட்டப்பேரவைத் தலைவர் அன்பழகன் தலைமையில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அசனா, பாஸ்கர், வையாபுரி, மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகிக்க இந்தப் போராட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய சட்டப்பேரவைத் தலைவர் அன்பழகன், “திமுக துணையோடு புதுச்சேரியில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசானது, ’சிறுபான்மை மக்களின் தோழன்’ என்று கூறி சிறுபான்மை மக்களுடைய உரிமையை, தொடர்ந்து பறித்து வருகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் வக்பு வாரியம் அமைக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு உள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து காலியாக உள்ள வக்பு வாரியம் இன்னமும் அமைக்கப்படவில்லை. புதுச்சேரியில் வக்பு வாரியம் அமைக்கப்படாததால் இஸ்லாம் சமுதாய மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.