புதுச்சேரியில் மத்திய அரசின் தன்னாட்சிப் பெற்ற ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்) இயங்கி வருகிறது. கடந்தாண்டு வரை இங்குள்ள 200 இடங்களுக்கு, அதாவது புதுச்சேரியில் 150 இடங்களுக்கும், காரைக்காலில் உள்ள 50 இடங்களுக்கும் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டு சேர்க்கை நடைபெற்றது.
இந்த முறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகப் பல்வேறு புகார்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்படும் மாணவர் சேர்க்கை, இந்தக் கல்வியாண்டு முதல் நீட் தேர்வு மூலமே நடத்தப்படும் என்றும் நிர்வாகம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 7 இடங்களில் தொழில் பழகுநர் தேர்வு முகாம்