ETV Bharat / bharat

’தீப்பிழம்பின் பின்னணியில் ஜொலித்த மாத்திரி மந்திர்' - ஆரோவில்

புதுச்சேரி: ஆரோவில் உதயமான 52 ஆவது ஆண்டு தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுவதையொட்டி ஆரோவில் மாத்திரி மந்திர் அருகில் அமைந்துள்ள ஆம்பி தியேட்டரில் 'போன் பையர்' ஏற்றி ஏராளமானோர் கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.

aurovile
aurovile
author img

By

Published : Feb 28, 2020, 4:10 PM IST

சர்வதேச நகரமான ஆரோவில் உதயமாகி 52ஆவது தினத்தையொட்டி, அங்கு வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், 'போன் பயர்' ஏற்றி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில், மனிதகுல ஒருமைப்பாட்டை லட்சியமாகக் கொண்டு ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது.

ஆரோவில் நகரை வடிவமைக்கும் பணியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் ஜாதி, மதம், இனம், மொழி, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, அர்ப்பணிப்புடன் பணியாற்றினர்.

ஆரோவில் உதயமான தினத்தையொட்டி, ஆரோவில்லில் வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், மாத்திரி மந்திர் அருகில் அமைந்துள்ள ஆம்பி தியேட்டரில் அதிகாலை 5:00 மணிக்குக் கூடினர். அங்கு, காலை 5.15 மணிக்கு 'போன் பையர்' ஏற்றி, தியானத்தில் ஈடுபட்டனர். கூட்டு தியானம், 6.15 மணிக்கு முடிவடைந்தது. 'போன் பயர்' தீப்பிழம்பின் பின்னணியில், மாத்திரி மந்திர் தங்க நிறத்தில் ஜொலித்தது அங்கிருந்த அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.

’தீப்பிழம்பின் பின்னணியில் ஜொலித்த மாத்திரி மந்திர்'

இதையும் படிங்க: '21 அரிவாள் மீது நடந்த பூசாரி' - ஆன்மிகமும் அறிவியலும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.