ETV Bharat / bharat

‘செல்ஃபி எடுத்த எம்எல்ஏ மீது நடவடிக்கை எடித்திடுக!’ - பேரவைத் தலைவரிடம் அதிமுக மனு - செல்ஃபி எடுத்த எம்.எல்.ஏ

புதுச்சேரி: சட்டப்பேரவை கூட்டத்தின்போது செல்ஃபி எடுத்து பேரவையின் கண்ணியத்தைக் சீர்குலைத்த உறுப்பினர் ஜான் குமார் மீது பேரவைத்தலைவர் நடவடிக்கை எடுக்க அதிமுக வலியுறுத்தியுள்ளது.

mla
mla
author img

By

Published : Feb 13, 2020, 7:31 PM IST

புதுவை மாநில அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவர் அன்பழகன், இன்று சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்துவிடம் மனு ஒன்றை அளித்தார். பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்பழகன், “ சட்டப்பேரவையில் பேரவை நிகழ்வின்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார், தனது இருக்கையில் அமர்ந்து கொண்டு செல்போனில் செல்ஃபி எடுக்க, அதற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அனந்தராமன் சிரித்துக் கொண்டு போஸ் கொடுத்தபடி இருக்கிறார். இந்தப் புகைப்படங்களை தனது வாட்ஸ் ஆப்பிலும் குரூப்பில் ஜான்குமார் பதிவிட்டுள்ளார்.

சட்டப்பேரவை நடக்கும்போதே ஆளுங்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், பேரவையின் கண்ணியத்தை சீர்குலைக்கும் வகையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டுள்ளனர். ஆனால், அதன் மீது பேரவைத் தலைவர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகமாக, ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு ஆதரவாக நடப்பது அப்பதவியினுடைய மாண்பை சீர்குலைக்கும் செயலாக உள்ளது.

செல்ஃபி எடுத்த எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடித்திடுக! - பேரவைத் தலைவரிடம் அதிமுக மனு

எனவே, சட்டப்பேரவையின் கண்ணியத்தை சீர்குலைக்கும் விதத்தில் செயல்பட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் மீது உரிய நடவடிக்கையை சட்டப்பேரவைத் தலைவர் எடுக்க வேண்டும் “ என்று கூறினார்.

இதையும் படிங்க: சட்டப்பேரவைக் கூட்டத்தில் செல்ஃபி எடுத்த எம்.எல்.ஏ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.