புதுச்சேரியில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க1031 என்ற இலவச எண் செயல்பாட்டில் உள்ளது. இந்த எண்ணிற்கு கடந்த இரு தினங்களுக்கு முன் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் எதிர்முனையில் பேசியவர் ராஜீவ் காந்தி அரசு மகளிர் மகப்பேறு மருத்துவமனை எதிரில் சுமார் 67 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சுயநினைவின்றி சாலையோரம் கிடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக இதுகுறித்த தகவல் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. காவலர்கள் நாகராஜ், ராஜ்மோகன் ஊர்க்காவல் படை வீரர் பொற்செழியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு மூதாட்டி ஒருவர் அழுக்கு ஆடையுடன் சுயநினைவின்றி காணப்பட்டார். இதையடுத்து முதல்கட்டமாக காவலர்கள் அந்த மூதாட்டிக்கு அருகில் இருந்த கடையில் புதிய புடவையை வாங்கி உடுத்தினர். பின் மூதாட்டிக்கு உணவு வாங்கி கொடுத்து சாப்பிட வைத்தனர்.
பின்னர் ஆம்புலன்ஸை வரவழைத்து அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கரோனா பீதியில் உள்ள இந்த சமயத்தில் சாலையோரத்தில் ஆதரவற்று இருந்த மனநலம் பாதித்த மூதாட்டிக்கு காவலர்கள் புடவை வாங்கிக் கொடுத்து உணவளித்து மருத்துவமனையில் சேர்த்துள்ள இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு உதவிய காவலர்கள் - புதுச்சேரி காவலர்கள்
புதுச்சேரி: சாலையோரம் மனநலம் பாதிக்கப்பட்டு சுயநினைவின்றி இருந்த மூதாட்டி ஒருவருக்கு உடை, உணவளித்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவலர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.