ETV Bharat / bharat

"பண்டிகை காலங்களில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்" - கிரண்பேடி! - Governor of Puducherry

புதுச்சேரி: பண்டிகை காலங்களில் மக்கள் கரோனா பரவலில் இருந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.

kiran-bedi
kiran-bedi
author img

By

Published : Oct 16, 2020, 10:43 AM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வாட்ஸ்-அப் பதிவில், "பண்டிகை காலங்களில் புதுச்சேரிக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதில் முதியவர்கள் அதிகம் வருகை தந்தால் சுகாதாரம் பாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. நமக்கான சோதனைக் காலம் இன்னும் வரவில்லை.

புதுச்சேரியில் இன்னும் மக்கள் முகக் கவசம் முறையாக அணிவதில்லை. தற்போதுள்ள சூழலில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய பொறுப்புள்ளது. எனவே பொது மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடித்து, முகக்கவசம் அணிய வேண்டும். அத்துடன் பண்டிகை காலங்களில் கூட்டங்களில் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும்.

எந்த காய்ச்சலாக இருந்தாலும், ஆரம்ப சுகாதார நிலையம் சென்று பரிசோதனை செய்ய வேண்டும் அல்லது மொபைல் போன் பரிசோதனைக் குழுவை அழைக்க வேண்டும்" என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: புதுச்சேரி மருத்துவக் கல்லூரிகளுக்கு அபராதம்; ஆளுநர் கிரண்பேடி வரவேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.