புதுச்சேரியில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதனிடையே புதுச்சேரியில் உள்ள சில தனியார் மருந்தகங்களில் முகக்கவசங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதாகப் புகார்கள் எழுந்த நிலையில், புதுச்சேரி மாநிலம் முழுவதும் முகக்கவசம், கிருமி நாசினி ஆகியவற்றை அதிக விலைக்கு விற்கக்கூடாது எனச் சுகாதாரத் துறை எச்சரிக்கைவிடுத்திருந்தது.
இருப்பினும் நிர்ணயித்த விலையைவிட சில மருந்தகங்களில் முகக்கவசங்கள் தொடர்ந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுவந்தன.
இதைத் தொடர்ந்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் உத்தரவின்பேரில், எடையளவுத் துறை கட்டுப்பாட்டு அலுவலர் தயாளன் மேற்பார்வையில், ஆய்வாளர் விஜயரங்கம், குமார் உள்ளிட்ட அலுவலர்கள் வி.வி.பி. நகர், காமராஜ் சாலையில் உள்ள தனியார் மருந்தகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அப்பகுதிகளில் அதிக விலைக்கு முகக்கவசங்களை விற்பனைசெய்த மருந்தகங்களிலிருந்து முகக்கவசங்களைப் பறிமுதல்செய்தனர்.
இதையும் படிங்க: கோவிட் - 19 அச்சுறுத்தல் மத்தியிலும் சி.ஏ.ஏ.வை எதிர்த்து நூதன போராட்டம்