ETV Bharat / bharat

புதுச்சேரி முதலமைச்சர் பங்கேற்ற போராட்டத்தால் கரோனா அதிகரிக்க வாய்ப்பு - கிரண் பேடி - Protest against farm laws

புதுச்சேரி முதலமைச்சர் பங்கேற்ற போராட்டத்தால் கரோனா தொற்று எண்ணிக்கை வாய்ப்புள்ளதாக, அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

துணை நிலை ஆளுநர் கிரண் பேடி
துணை நிலை ஆளுநர் கிரண் பேடி
author img

By

Published : Dec 8, 2020, 9:58 PM IST

புதுச்சேரி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று (டிசம்பர் 8) முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

அந்த வகையில், புதுச்சேரியிலும் கடைகளை அடைத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

அதேபோன்று அம்மாநிலத்தின் பேருந்து நிலையம் எதிரே காங்கிரஸ் கூட்டணி கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்றார்.

இந்நிலையில், நாராயணசாமி பங்கேற்ற போராட்டம் குறித்து புகைப்படத்துடன் செய்தி குறிப்பு ஒன்றை அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்துள்ளார்.

அதில், "புதுச்சேரியில் நடைபெற்ற போராட்டத்தை பார்க்கும்போது மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதைத் தடுக்க மருத்துவக் குழு தயாராக இருக்க வேண்டும். பொதுமக்கள் புதுச்சேரியைப் பாதுகாப்பதுடன் தங்களையும் காத்துக் கொள்ளவேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: 'வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம்' -புதுச்சேரி முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.