புதிய வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் புதுச்சேரியில் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, "ஜனநாயகத்தை படுகொலை செய்து இந்தச் சட்டத்தை மோடி அரசு நிறைவேற்றியுள்ளது.
குரல் வாக்கெடுப்பின் மூலம் இச்சட்டத்தை நிறைவேற்றக்கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோதும் அதை மீறி குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. இச்சட்டத்தை எதிர்த்து ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போரட்டம் நடத்திவருகின்றனர். இச்சட்டம் விவசாயிகளை கார்ப்பரேட்டுக்கு அடிமையாக்கிவிடும்.
இந்தப் போராட்டத்தை நடத்தக்கூடாது என ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதினார். முதலில் நான் காங்கிரஸ் கட்சித் தொண்டன். அதன்பிறகுதான் முதலமைச்சர். என்னிடம் இந்தப் பூச்சாண்டியெல்லாம் காட்டவேண்டாம். இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். ஆட்சி டிஸ்மிஸ் ஆனாலும் கவலைப்படமாட்டேன்" இவ்வாறு தெரிவித்தார்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்கியது திமுக' - க.பொன்முடி