பிரதமர் நரேந்திர மோடி ஐந்தாவது முறையாக காணொலி மூலம் மாநில முதலமைச்சர்களுடன் நேற்று பேசினார். இதில், 31 மாநில முதலமைச்சர்கள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, " தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் கடைகள், தொழிற்சாலைகள் திறப்பது குறித்தும் பிரதமரிடம் தெரிவித்தோம்.
ஊரடங்கு இரண்டு மாதங்களாக மாநில வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது 12 விழுக்காடு வருவாய் மட்டுமே கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தோம். ஊரடங்கு நீடித்தால் மாநில வருவாய் பாதிக்கப்படும். இதனால், வருவாயை ஈடு செய்யும் வகையில், மத்திய அரசு உதவி செய்யவேண்டும். நிதி ஆதாரம் குறித்து பிரதமர் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. புதுச்சேரி அரசு ரிசர்வ் வங்கியில் கடன் வாங்கும் சூழ்நிலையில் உள்ளது.
வயது முதிர்ந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்பதால் தனியார் மருத்துவமனைகளை திறக்க பிரதமர் அறிவுறுத்தினார். பிரதமர் பேசியதை வைத்துப் பார்க்கும்போது தளர்வுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்பது தெரிகிறது. புதுச்சேரி மக்கள் அனைத்துக்கும் தயாராக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’மக்கள் பிரதிநிதியால் முடியாததுகூட மாணவர்களால் சாத்தியம்’