கரோனா தொற்று பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தடுக்க காவலர்கள் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கரோனாவை தடுக்கும் பணியில் மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு கடும் பணிச்சுமை உள்ளது. இரவு, பகல் பாராமல் மக்களுக்காக அயராது உழைக்கின்றனர்.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் ஹூக்கேரி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றுபவர் சிவானந்தா குடகனஹட்டி. ஊரடங்கு அமல் காரணமாக இவருக்கு அதிகப்படியான பணிகள் இருந்துள்ளன.
இந்நிலையில் இவரது மகள் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இந்தத் தகவல் சிவானந்தாவுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், காவலர் சிவானந்தாவோ மனைவியிடம் குழந்தையை கவனிக்கச் சொல்லிவிட்டு தனது கடமையிலிருந்து தவறாது, தொடர்ந்து மக்களுக்கான பணியில் ஈடுபட்டுள்ளார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மகளைக் பார்க்கச் செல்லாமல் கடமையில் கண்ணாய் இருக்கும் இந்தக் கடமை தவறாத காவலரை சக காவலர்கள் பாராட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: நான் போலீஸ் எனக்கே பெட்ரோல் இல்லையா - பங்க் ஊழியரை தாக்கியத் தலைமைக் காவலர்