ETV Bharat / bharat

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 500 பேருந்துகள் ஏற்பாடு - பிரியங்கா காந்தி! - உத்தரப் பிரதேசம்

டெல்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல 500 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

priyanka gandhi  Uttar Pradesh  migrants  Rajasthan  Yogi Adityanath,  பிரியங்கா காந்தி  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்  உத்தரப் பிரதேசம்
priyanka gandhi
author img

By

Published : May 17, 2020, 11:17 PM IST

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேசம் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாப்பாக அவரவர் வீடுகளுக்கு அழைத்துச் செல்வதற்காக 1,000 பேருந்துகளை இயக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், ராஜஸ்தானில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தங்களது சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல 500 பேருந்துகளை காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான முழு செலவும் காங்கிரஸ் ஏற்கும் எனக் பிரியாங்காந்தி கூறியுள்ளார்.

முன்னதாக, உ.பி., காங்கிரஸ் உத்தரப் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் நெடுஞ்சாலை பணிக்குழு, சமையல் கூடங்களை அமைத்திருந்தது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மருந்துகள், உணவுப் பொட்டலங்களுடன் உதவுவதற்காக மாநிலம் முழுவதும் 40 முகாம்களை அமைக்கவும் உ.பி., காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க:உ.பி.,யில் ஆயிரம் பேருந்துகளை இயக்க பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.