மத்தியப் பிரதேச மாநிலம் ராட்லத்தில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் உத்தரப் பிரதேச கிழக்குப்பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி கலந்து கொண்டார்.
பிரியங்கா காந்தியின் வருகையால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அவர் சென்றபோது அங்கு திரண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக மிகுதியில் ஆர்ப்பரிக்கத் தொடங்கினர்.
இதைக்கண்ட பிரியங்கா காந்தி தனது ஆதரவாளர்களை சந்திப்பதற்காக தடுப்புகளைத் தாண்டி குதித்துச் சென்றார். நடிகை விஜயசாந்தியை போல் ஸ்டைலாக குதித்து வந்த பிரியங்கா காந்தியை பெண் தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுத்தனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.