நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதில் மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும் மாநிலமாக கருதப்படும் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் போட்டியிட தனித்துவிடப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தி வத்ரா, அண்மையில் உத்திரப்பிரதேச கிழக்கு மாகாண காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அவர் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றபின் முதல் முறையாக இன்று லக்னோ வந்துள்ளார். அவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து இவர்களுடன் வடக்கு உத்தரப்பிரதேச பொதுச் செயலாளர் ஜோதிரா ஆதித்யாவும் கலந்து கொண்டு திறந்த வாகனத்தில் பேரணியாக சென்றார். இதில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வழி நெடுகிலும் நின்று அவர்களுக்கு அமோக வரவேற்பு அளித்தனர்.