அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்கான பூமி பூஜை நாளை (ஆகஸ்ட் 5) நடைபெறவுள்ள நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'இந்திய துணைக்கண்டத்தின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக ராமர் காலம்காலமாக விளங்குகிறார். உலகம், இந்திய துணைக் கண்டத்தின் நாகரிகத்தில் ராமாயணம் நீங்காத இடம் பெற்றுள்ளது. ராமர் அனைவருக்கும் பொதுவானவர், ராமர் அனைவருக்குமான நலனை விரும்பியவர். இதன் காரணமாகவே அவர் மரியாதைக்குரிய உத்தமராகப் போற்றப்படுகிறார்.
நாளை நடைபெறும் பூமி பூஜை விழா தேச ஒற்றுமை, சகோதரத்துவம், கலாசார ஒற்றுமை ஆகியவற்றுக்கு வழிவகுக்கும், ராமரின் ஆசி அனைவருக்கும் கிட்டும்' என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மணீஷ் திவாரி ஆகியோர் ராமர் கோயில் பூமி பூஜைக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயில் கட்டமைப்பு எவ்வாறு இருக்கும் தெரியுமா? - உள்ளே முப்பரிமாண காணொலி!