ETV Bharat / bharat

நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பிரியங்கா காந்தி?

ராய்பூர்: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Gandhi
Gandhi
author img

By

Published : Feb 17, 2020, 9:14 PM IST

தொடர் தோல்வியை சந்தித்துவரும் காங்கிரஸ் கட்சியை மீட்க, பிரியங்கா காந்தியை முன்னிறுத்த வேண்டும் என தொண்டர்கள் பலர் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இந்நிலையில், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடையவுள்ளது.

கட்சியை மீட்கும் நோக்கில் நாடாளுமன்றத்திற்கு பிரியங்கா காந்தியை அனுப்ப வேண்டும் என மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு நான்கு மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் சஜ்ஜன் சிங் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், "பட்டியலின மக்கள், பழங்குடியினர்கள், பெண்கள் ஆகியோரின் வளர்ச்சியில் இந்திரா காந்தி உறுதி பூண்டிருந்தார். அவரின் பாதையை பிரியங்கா காந்தி தொடர்கிறார். எனவே, மத்தியப் பிரதேசத்திலிருந்து பிரியங்கா காந்தியை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: உச்ச கட்ட உட்கட்சி பூசல் - காங்கிரஸ் கட்சியில் கெஜ்ரிவால் ஆதரவும் எதிர்ப்பும்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.