காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள், உத்தரப் பிரதேசத்திற்கு அழைத்து வருவதற்காக ஆயிரம் பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்தார்.
பல்வேறு மாநிலங்களில் இருந்த தொழிலாளர்கள் அந்த பேருந்துகளின் மூலம் சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டனர். ஆனால், உத்தரப் பிரதேச அரசாங்கம் அந்த பேருந்துகளை மாநில எல்லைக்குள் நுழைவதற்கு அனுமதியளிக்கவில்லை.
பேருந்துகளை இயக்குவதற்கான வாய்ப்பை நீட்டித்ததை அடுத்து, அவரது தனிச் செயலாளர் பேருந்துகள் மற்றும் அதன் ஓட்டுநர்கள் பற்றிய விவரங்களை உ.பி., அரசுக்கு வழங்கியுள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், பேருந்துகளின் பட்டியலை உத்தரப் பிரதேச அரசாங்கம், காங்கிரஸிடம் கேட்டது. இதனையடுத்து, பிரியங்கா காந்தியின் தனிச் செயலாளர் பேருந்துகள், அதன் ஓட்டுநர்கள் பற்றிய விவரங்களை வழங்கினார்.
இது குறித்த கடிதத்தில் பிரியங்கா காந்தியின் தனிச் செயலாளர் சந்தீப் சிங் கூறியதாவது, "ஆயிரம் பேருந்துகளின் அனைத்து விவரங்களும் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றில், சில ஓட்டுநர்கள் மறுபரிசீலனை செய்யப்படுவார்கள், அந்த விவரங்களும் சில மணிநேரங்களில் உங்களுக்கு அனுப்பப்படும். அந்த பேருந்துகள் விரைவில் இயக்க அனுமதி வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பேருந்துகளின் பட்டியலை சமர்ப்பிக்கவில்லை என்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்னையில் 'குட்டி அரசியல்' விளையாடியதாகவும் காங்கிரஸை அவதூறாக பேசியிருந்தார்.
இதையும் படிங்க: புலம்பெயர்ந்தோரை மாநிலத்துக்குள் அனுமதியுங்கள்...! ஆதித்யநாத்துக்கு பிரியங்கா கோரிக்கை