இது குறித்து மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் அறிக்கையில், “தனியார் நிறுவனங்களும் இனி விண்வெளி சேவை, செயற்கைக்கோள் ஏவுதல் உள்ளிட்டவற்றில் பங்காற்றலாம். அதுமட்டுமின்றி வருங்கால திட்டங்களிலும் தனியாருக்கும் இடமுண்டு” எனக் கூறியுள்ளார்.
மேலும், “இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் வசதிகள், பிற சொத்துக்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தலாம் என்றும், இவை அந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை வளர்க்கும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, “கரோனா வைரஸ் தொற்றால் நிலவுக்கு மனிதனை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்கான பயிற்சி தடைப்பட்டுள்ளது. இதற்காக நான்கு விண்வெளி வீரர்கள் ரஷ்யாவில் பயிற்சி பெற்றுவருகின்றனர். பத்து ஆயிரம் கோடி ரூபாயில் உருவாகும் இந்தத் திட்டம் 2022-ஆம் ஆண்டுக்குள் முடிவடையும்” என்றும் கூறியுள்ளார்.
பொதுத் துறை நிறுவனங்கள், சுரங்கம், கனிமத் துறை, விமானத் துறை உள்ளிட்ட பல துறைகளின் கதவுகள் தனியாருக்கு திறந்துவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...டெல்லி கலவரம்: வெடிமருந்துகள் வாங்க பணம் கொடுத்தது தாஹிர் உசேன்தானாம்!