ETV Bharat / bharat

தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுத்த கெஜ்ரிவால்! - டெல்லி தனியார் மருத்துவமனை

டெல்லி: கரோனா நோயாளிகளுக்கு அனுமதி மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் எச்சரித்துள்ளார்.

Arvind
Arvind
author img

By

Published : Jun 6, 2020, 4:31 PM IST

தலைநகர் டெல்லியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதன் எதிரொலியாக, அரசு மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு நிலவும் அபாயம் தற்போது எழுந்துள்ளது.

இதையடுத்து தனியார் மருத்துவமனைகளை நோக்கி நோயாளிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். அதேவேளை தனியார் மருத்துவமனைகள், கரோனா பாதிப்பு நோயாளிகளை முறையின்றி நடத்துவதாகத் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன.

குறிப்பாக, சில மருத்துவமனைகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதுடன், பல நோயாளிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

தனியார் மருத்துவமனைகள் தங்கள் படுக்கைகளைக் குறைத்துக்காட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுவது வேதனைக்குரியது என்று கூறியுள்ள அவர், இந்த குற்றச்செயலில் ஈடுபடும் மருத்துவமனைகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது எனவும் எச்சரித்துள்ளார். டெல்லியில் இதுவரை 26 ஆயிரத்து 333 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: குடிபெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மனித உரிமை ஆணையம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.