குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் இருந்தப்படி காணொலி வாயிலாக அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடன் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து கலந்தோசித்தார். அப்போது அவர், ஆளுநர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் ஆளுநர்கள் அளித்துள்ள யோசனைகளையும் கேட்டு தெரிந்துக்கொண்டார். கேரள ஆளுநர் முகம்மது ஆரீப் கான், கேரளத்தில் கோவிட்19 வைரஸ் தொற்றுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பேசினார். இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராட ஓய்வுபெற்றவர்கள் உட்பட பல்வேறு தனியார் நிறுவனங்களின் 18 ஆயிரம் மருத்துவர்கள் மாநில அரசுடன் இணைந்து பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.
மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் இந்தூரில் சில பிரச்னைகள் இருப்பதாக தெரிவித்தார். இதனை சீராக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது என்று தெரிவித்தார். கோவிட்19 பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
இது பற்றி மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷியாரி கூறுகையில், “நகர்ப்புறங்களில் சமூக தூரத்தை கடைபிடிக்கின்றனர். எவ்வாறாயினும் கிராமப்புற பைகளில் நிர்வாக இயந்திரங்கள் மற்றும் தன்னார்வ அமைப்பு மூலம் கல்வி கற்பிப்பதற்கும் கிராம மக்கள் மிக நெருக்கமாக இருப்பதைத் தவிர்ப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றார்.
டெல்லி லெப்டினன்ட் ஆளுநர் அனில் பைஜால் பேசுகையில், “முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தினசரி அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்கள், மற்றும் காவல்துறை துணை கமிஷனர் (டி.சி.பி) உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்தி வருகிறேன். தேசிய தலைநகரில் உணவு மற்றும் மளிகைப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருத்தகங்கள் 24 மணி நேரமும் இயங்குகின்றன” என்றார். இந்தச் சந்திப்பின்போது குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடுவும் தனது இல்லத்தில் இருந்தப்படியே கலந்துகொண்டார். அப்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பொதுமக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் தடையின்றி கிடைக்க முயற்சிகள் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 'புதினுடன் மோத முடிவெடுத்த சவூதி அரேபியா'- எண்ணெய் போரின் கதை!